19 மார்ச், 2012

ஆதார் அடையாள எண்

நீண்ட நாட்களாக எனக்குள் ஒரு கேள்வி ஆதார் அடையாள அட்டையை மேம்படுத்தி தனி நபர் அடையாள அட்டைக்கு (Unique identification card) மாற்றாக பயன்படுத்தினால் என்ன ? எதற்காக அரசாங்கம் இரண்டு செலவு செய்ய வேண்டும். ஆதார் அடையாள அட்டைக்கும் தனி நபர் அடையாள அட்டைக்கும் இடையே வேறுபாடு இருந்தால் தனி நபர் அடையாள அட்டையை மட்டும் மத்திய அரசு எற்றுக்கொள்ளும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சொல்கிறார். இரண்டுமே மத்திய அரசு நிறுவனம் தான் பதிவு செய்கறது. எதற்காக இந்த முரன்பாடு. 

மேலும் ஆதார் அடையாள அட்டையில் நிறைய மாற்றங்கள் செய்தால் நாட்டின் பாதுகாப்பு மற்றும் கருப்புப்பணம் பதுக்கலை தடுக்கலாம்

உதாரணம் 1 : புதிய அலைபேசி இணைப்பிற்கு ஆதார் அடையாள அட்டை மூலம் கைரேகையுடன் இணைப்பு வழங்கனால் சமூகவிரோதிகள் அலைபேசி பயன்படுத்துவதை தடுக்களாம்

உதாரணம் 2 :  நிலம் பத்திரபதிவில் சிறு மாற்றங்கள் செய்தால் நிலமோசடி மற்றும் கருப்புப் பண முதலீடு தடுக்கப்படும். முக்கியமாக பழைய பதிவுகளும் நில உரிமையாளர் கைரேகையுடன் மறுபதிவு செய்யவேண்டும். இதற்கு காலதாமதம் ஆகும். ஆனால் இந்த காலதாமதம் கருப்புப்பணத்தால் ஆகும் இழப்பை விட மிக குறைவே

உதாரணம் 3 : இழப்பீடுகளை உரிய நபர்களின் வங்கி கணக்கில் மட்டும் தான் செலுத்த வேண்டும். இலவசங்களை உரிய நபர்களின் கைரேகையுடன் செலுத்தியதை உறுதி செய்ய வேண்டும். இதில் காலதாமதம் ஏற்பட்டால் துறை அதிகாரி தகுந்த பதில் அளிக்க வேண்டும். 

இதைப்போல் நிறைய உதாரணங்கள் இந்த வலைப்பூவில் தொடரும்.

வருங்கால இந்தியாவை மூன்று மிக முக்கியமான எண்கள் ஆளும் என்று  திரு நந்தன் நில்கர்னி அவர்கள் கூறினார்கள். அந்த மூன்று எண்கள்

1. தனி நபர் அடையாள எண்
2. வங்கிக் கணக்கு எண்
3. அலைபேசி எண்

மீண்டும்...

04 ஜனவரி, 2012

சமூக பார்வை


நீங்கள் செல்லும் இடத்தில் மற்றவரது ஓட்டுனர் உரிமம், குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம், நிரந்திர கணக்கு எண், பாஸ்போட் புத்தகம், அடையாள அட்டை இவற்றை கண்டால் எடுத்து அருகாமையில் உள்ள தபால் நிலையத்தில் ஒப்படைக்கவும் அல்லது தபால் பெட்டியில் போடவும்.

அந்த பொருள் உரிய நபர்களிடம் தபால் நிலையம் மூலமாக தகுந்த அபராதத்துடன் ஒப்படைக்கப்படும்.

மத்திய அரசு இதற்கு என ஒரு சட்டம் வகுத்துள்ளது.

ஆதலால் முடிந்த வரை மேற்கண்ட பொருள்களை தாமதமில்லாமல் ஒப்படைத்தால் உரிய நேரத்தில் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

இந்த தகவலை எனக்கு தெரிவித்த நன்பர் செந்தில்குமார் கிருஷ்ணசாமி அவர்களுக்கு நன்றி

தொடர் வண்டி புகார் அலைபேசி எண் 81212 81212



தொடர் வண்டி சம்மந்தமாக அல்லது தொடர் வண்டி நிலையத்தில் எதாவது குறைபாடு இருந்தால் 81212 81212 எண்ற அலைபேசி எண்ணிற்கு புகார் ஒன்றை குறுதகவல் (SMS) மூலம் அனுப்பினால் உடனடியாக குறைபாடு சரிசெய்யப்படும்.

உடனடியாக உங்களது அலைபேசி எண்ணிற்கு நன்றியுடன் குறைபாடு சரி செய்யப்பட்டதற்கான தகவலும் வரும்.

இதை சரியாக பயன்படுத்தி தொடர் வண்டியில் நமது பயனத்தை  நிம்மதியாகவும் மனநிறைவுடன் இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம்.

இந்த தகவலை எனக்கு தெரிவித்த நன்பர் சரவணன் பரமசிவம் அவர்களுக்கு நன்றி

24 டிசம்பர், 2011

குடும்ப அட்டை புதிய செய்திகள்

தமிழ் நாடு அரசு குடும்ப அட்டை சந்தாதாரர்கள் அனைவருக்கும் அடுத்த  வருடம் 2013 முதல் புதிய பயோமெட்ரிக் (தமிழிழ் சரியாக தெரியவில்லை) முறையில் குடும்ப அட்டை வெளியிடுவது வரவேற்கதக்கது.

இலவச பொருள்கள் வாங்க வரும் குடும்ப உறுப்பினர்கள் ஒருவரது கைரேகையை பதிவு செய்தபின் பொருள்களை வழங்கினாள் கள்ள சந்தையில் பொருள்கள் விற்கப்படுவது முற்றிலும் ஒழித்து விடலாம்.

விற்பனை நிலையம் வர முடியாத முதியவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு சிறப்பு முகவர் அல்லது உதவியாளர் ஒருவரை கைரேகையுடன் குடும்ப அட்டையில் அவர்களை இனைத்துக்கொள்ள அனுமதிக்கலாம். ஆனால் அந்த முகவர் அல்லது உதவியாளர் இவரைப்போல ஒருவருக்கு மட்டும் முகவர் அல்லது உதவியாளராக இருக்க கட்டுப்பாடு விதிக்கலாம்.

இந்த செய்தியை பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்

மீண்டும்......

சரவணன் TS

19 டிசம்பர், 2011

சங்கமம் 2011

18-12-11 நடந்த சங்கமம் 2011 என்னை மிகவும் கவர்தது. நடத்திய ஈரோடு தமிழ் வலைபதிவர் குழுமம் நன்பர்கள் வந்த அனைத்து நபர்களையும் அன்புடன் வரவேற்று இனையத்தில் இருந்து சிறந்த 15 வலைபதிவுகளை தேற்வு செய்து அதை உருவாக்கி திறம்பட நடத்தி வரும் நன்பர்களுக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தது என் நெஞ்சை நெகிழ வைத்தது. நிகழ்சியின் முக்கிய நிகழ்வான சிறப்பு விருந்தினர் திரு ஸ்டாலின் குனசேகர் அய்யா அவர்களின் சீர்மிகு உரை அனைவருக்கும் நல்ல வழிகாட்டியாக இருந்தது. நிறைவாக வந்திருந்த நன்பர்கள் அனைவரும் தங்களை அறிமுகபடுத்திக் கொண்டது நல்ல ஒரு செயல்பாடு ஆகும். நிறைவாக மதிய உணவு சைவம் & அசைவம் என்று நன்றாக மற்றும் நிறைவாக கவனித்துக்கொண்டார்கள்.  நீங்காத நினைகளுடன் இன்று மனதால் சங்கமித்து உடலால் பிரிந்தோம் அடுத்த சங்கமம் 2012 எதிர்னோக்கி.

நட்புடன்
சரவணன் TS

09 டிசம்பர், 2011

எனது இந்தியா

வணக்கம் இது எனது புதிய வலைபூ.

இது நமது வருங்கால இந்தியா மற்றும் நமது சுய ஒழுக்கம் பற்றிய ஒரு விழிப்புனற்வு வலைபூ.

முதலில் நாம் சரியாக இருந்தால் தான் நம் நாடு சரியாக இருக்கும்.

நாம் செய்வதெல்லாம் சரிதானா என தெரிந்து கொள்ள நமது என்னங்களை, செயல்களை மற்றவற்களுடன் பகிற்ந்து கொள்ள வேண்டும்.

அதற்கு தான் இந்த “ எனது இந்தியா T20 ”

அப்துல் கலாம் அய்யா சொன்னது போல் வரும் 2020 வருடம் நமது இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்று நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.


நமது இந்தியா வல்லரசாக மாறுவதற்கு முதல் நாம் நம் என்னங்களை, செயல்களை மாற்ற வேண்டும்.


ஆதலால் உங்கள் கனவுகள், என்னங்கள் மற்றும் கருத்துக்களை இங்கே பதியுங்கள்.

இது மட்டும் தான் தீற்வு அல்ல இதுவும் ஒரு பாதை.


மீண்டும்.....

தன்னையறிந்தால் தனக்கொரு கேடும் இல்லை
தன்னையறியாமல் தானே கெடுகிறான்............             திருமூலவர்